ICC T20 உலகக்கிண்ணத்தில் முக்கிய திருப்பம் பாகிஸ்தான் எடுத்த எதிர்பாராத முடிவு

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் பங்கேற்பிற்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, உலகக்கிண்ணத் தொடரின் பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. எனினும், எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி இந்திய அணியை எதிர்த்து நடைபெறவிருந்த போட்டியில் மட்டும் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு அரசியல் அல்லது பாதுகாப்பு தொடர்பான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகள் எப்போதும் அதிக கவனத்தை ஈர்க்கும் நிலையில், இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது.இந்திய அணியுடன் நடைபெறவிருந்த போட்டியை பாகிஸ்தான் அணி தவிர்ப்பதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், உலகக்கிண்ணத் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவலான கலந்துரையாடல்களும் பரபரப்பும் உருவாகியுள்ளது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660