உள்நாடு
Feb 03, 2026
இலங்கையில் மீண்டும் தங்க விலை அதிகரிப்பு
இலங்கையில் தங்க விலை இன்று அதிகரித்துள்ளதாக செட்டியார் தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒவ்வொரு அவுன்ஸிற்கும்130 அமெரிக்க டொலர் உயர்ந்து 4,816 டொலராக பதிவாகியுள்ளது.மேலும் இதன் தாக்கத்தால், நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 338,600 ரூபாயிலிருந்து 11,000 ரூபாய் உயர்ந்து 349,600 ரூபாயாகும் அளவிற்கு வந்துள்ளது. அதேபோல், 24 கரட் தங்கத்தின் விலை 368,000 ரூபாயிலிருந்து 380,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வு காரணமாக, உள்ளூர் தங்க வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கவனமுடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.