உள்நாடு
Feb 03, 2026
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக் கடிதம், தமிழரசுக் கட்சியின் தலைமையால் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனூடாக, சாணக்கியன் எம்.பி. அவர்கள் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.