உள்நாடு
Feb 03, 2026
CID-ல் வாக்குமூலம் வழங்கிய நாமல் ராஜபக்ஷ வெளியேற்றம்
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, விசாரணைகளைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்ஷ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் CID அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.