சுதந்திர தின செய்தியில் கர்தினாலின் வலியுறுத்தல் நீதியும் சமத்துவமும் அவசியம்
இலங்கை மக்கள் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதனை அடைவதற்காக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், சட்டத்தின் ஆட்சி (Rule of Law) வலுப்படுத்தப்படுவது மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட விசேட அறிக்கையில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார். மேலும் அதில், சட்டம் அனைவருக்கும் சமமாகவும் நீதியுடனும் அமல்படுத்தப்படும் சமூகமே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என குறிப்பிட்டார்.மேலும் அவர் கூறியதாவது, நாட்டின் தற்போதைய சூழ்நிலையை ஆராயும் போது, பொருளாதாரம், அரசியல், சமூக மற்றும் பண்பாட்டுத் துறைகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டதாக கூற முடியாது என்றார். உண்மையான சுதந்திரம் என்பது அரசியல் சுயாட்சியுடன் மட்டுப்படுவதில்லை என்றும், நீதியும் சமத்துவமும் பொறுப்புணர்வும் நிலவும் சமூக அமைப்பு உருவாகும்போது தான் அது அர்த்தமுள்ளதாகும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.