சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வளிமண்டலவியல் திணைக்களம்
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று (09) மாலை 4.00 மணியளவில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின் அடிப்படையில், இந்த முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற மற்றும் வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.