இன்றைய வானிலை அறிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும் என இன்றைய தினம் எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேலும் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும்
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையற்ற வானிலை நிலவும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம்
அறிவுத்து உள்ளது.