நாடு முழுவதும் சீரற்ற காலநிலை

நாட்டில் இன்று வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேலும் நாட்டின் மற்றைய இடங்களிலும் பகல் வேலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது. மேலும் மேல்,சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சியும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ,மேலும்

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை, அம்பாந்தோட்டை, மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று,மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும்

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் திருக்கோணமலை ஊடாக பொத்துவில் வரையிலான கரையயோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும்,நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளிலிருந்து வீசக் கூடும். மேலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு

25-35 கிலோ மீற்றர் வரை வீசும் என எதிர்வு கூறப்படுகிறது.

புத்தளத்திலிருந்து மன்னார் வரையிலும் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும் அப்பகுதிகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும்

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரணம் முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும்

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​தற்காலிகமாக பலத்த காற்று வீசும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படலாம்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660