அதிக சுழல் பந்து வீரர்களுடனான நியூசிலாந்து அணி அறிவிப்பு
டி20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்து வலுவான சுழற்பந்துவீச்சாளர்களுடன் வருகை
இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்திற்கு நியூசிலாந்து அணி வலுவான சுழற்பந்துவீச்சாளர்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி கேப்டன் மிட்சல் சான்ட்னர் தலைமையில், ஆரம்ப சுற்றில் நான்கு போட்டிகளில் மூன்று ஆட்டங்களை சுழற்பந்துக்குப் சாதகமான சென்னை சேப்பாக்கம் அரங்கேற்றத்தில் விளையாட உள்ளது.
அணியில் சான்ட்னருடன் இஷ் சோதி, மைக்கல் பிரஸ்வெல், கிளன் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவிந்திரா போன்ற வலிமையான சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
பொரும்பாலான நியூசிலாந்து வீரர்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணி டி குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, அந்தக் குழுவில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அணிகள் இடம்பெற்றுள்ளன.