தென் கொரியாவின் முன்னால் ஜனாதிபதி கைது
முன்னாள் ஜனாதிபதியான தென் கொரியாவின் யூன் சுக் இயோலுக்கு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்களுக்காக நேற்று சியோல் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.மேலும்
இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கத் தவறியதாகவும் தனது கைதை மறைக்க ஆவணங்களைத் திருத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் இத்தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் யூன் சுக் இயோல் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் மிக முக்கியமான வழக்கு அரச துரோகம் மற்றும் கிளர்ச்சி ஆகும்,
இவ்வழக்கிற்கு அரச தரப்பு மரண தண்டனை கோரியுள்ள நிலையில், அதன் இறுதித் தீர்ப்பு பெப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.இவ் தீர்ப்பானது அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.