ஓமானில் நாளை ஈரான்,அமெரிக்க அணுசக்தி பேச்சுவார்த்தை
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான முக்கிய அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாளை (06) ஓமான் நாட்டில் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தமாக செயல்பட்டு உருவாக்கிய விசேட கட்டமைப்பின் கீழ், இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் இராஜதந்திர பதற்றத்திற்குத் தீர்வு காண்பதே இம்முயற்சியின் பிரதான நோக்கமாகும்.மேலும்
இந்த பேச்சுவார்த்தைகளின் போது, யுரேனியம் செறிவூட்டலை கட்டுப்படுத்துவது, பெலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் தொடர்பான வரம்புகள், மேலும் பிராந்தியத்தில் செயற்படும் ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் ஆயுதங்களை குறைக்கும் நடவடிக்கைகள் ஆகியவை முக்கிய விவாதப் பொருள்களாக அமையவுள்ளன.இதுகுறித்து கருத்து தெரிவித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஜி, நியாயமான மற்றும் சமச்சீர் அணுகுமுறையுடன் இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், பேச்சுவார்த்தைகள் நீதியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டும் என வெளியுறவு அமைச்சருக்கு தாம் அறிவுறுத்தியதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.