விமானி போல நடித்து நூற்றுக்கணக்கான பயணங்கள்,டொரோண்டோவில் கைது செய்யப்பட்ட 33 வயது ஆடவர்

நூற்றுக்கணக்கான முறை இலவசமாக விமானத்தில் பயணம் செய்த கனடாவைச் சேர்ந்த ஓர் ஆடவர் விமானி, விமானச் சிப்பந்தி போன்று வேடமமிட்டு சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் இவர் 33 வயதுடைய டால்லாஸ் பொகோர்னிக் என்றவர் ஆவார். இவர் கனடாவின் டொரோண்டோ நகரில் வைத்தே கைது செய்யப்பட்டார். வழக்குவிசாரணைக்காக அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். மேலும் இவர் 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பொகோர்னிக் டொரோண்டோவில் ஒரு விமான நிறுவனத்தில் விமானச் சிப்பந்தியாகப் பணியாற்றினார்.

பின்னர் அவர் பொய்யான ஊழியர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி 3 விமான நிறுவனங்களில் விமானிகளுக்கும் விமானச் சிப்பந்திகளுக்கும் ஒதுக்கி வைக்கப்படும் விமானச் சீட்டுகளைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

அவ்வாறு 4 ஆண்டுகளுக்கு பொகோர்னிக் ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர் எந்த விமானங்களில் இலவசமாகச் சென்றார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எனினும் பொகோர்னிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 250,000 அபராதத்தை எதிர்கொள்வார் என்று அமெரிக்க நீதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

விமானி போல நடித்து நூற்றுக்கணக்கான பயணங்கள், டொரோண்டோவில் கைது செய்யப்பட்ட 33 வயது ஆடவர்

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660