அமெரிக்கா கனடா உறவில் பதற்றம், வர்த்தகத் தடைகள் குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் கனடா இடையே நிலவி வரும் வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், கனடா சீனாவுடன் வர்த்தக உறவுகளை தொடர்ந்தால், அந்த நாட்டின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.மேலும், அமெரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் கனடா மறுப்பு தெரிவித்ததற்கு பதிலடி நடவடிக்கையாகவே இந்த வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.இதனுடன், கனடாவைச் சேர்ந்த அனைத்து விமானங்களுக்குமான சான்றிதழ்களை அமெரிக்கா இரத்து செய்யும் நடவடிக்கையும் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.