இந்திய மத்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு அதிகரித்த நிதியுதவி
நேற்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்தார்.இது அவர் சமர்ப்பிக்கும் 9-ஆவது மத்திய பட்ஜெட்டாகும். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நீண்டகால இலக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு மேம்பாடு, விவசாய வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துதல் ஆகிய துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும்
அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை(Neighbourhood First Policy) கொள்கையின் கீழ், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவியில் இம்முறை குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கைக்காக 400 கோடி இந்திய ரூபாய் (INR 400 Crore) ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட 300 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பாகும். இந்த நிதியுதவி, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிதி ஒதுக்கீடு, இந்தியாஇலங்கை உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் முக்கியமான அடையாளமாகவும் கருதப்படுகிறது.